அமெரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களைத் தாக்கிய அனல் காற்றால் இதுவரை 22 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
குறித்த பிராந்தியங்களின் சில பகுதிகளில் 43 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் தென் டகோடாவில் பெருந்தொகையான கால்நடைகள் இக் காலநிலை காரணமாக உயிரிழந்துள்ளன.
மேலும் நியூயோர்க்கில் குளிரூட்டிகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து எதிர்வரும் தினங்களில் மின்சார துண்டிப்புகள் இடம்பெறலாம் என மின்சார பாவனை நிறுவனமான கொன்எடிஸன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 50 சதவீதமான மக்கள் வெப்பநிலை அதிகரிப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.
அந்நாட்டில் ஒவ்வொரு வருடமும் அதிக வெப்பநிலையால் சராசரியாக 162 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
நன்றி: இணையம்
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores