நமீதாவின் வேண்டுகோள்

சினிமாக்காரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமை மாற வேண்டும் என்று நடிகை நமீதா கூறியுள்ளார். 17 வயதில் நடிக்க வந்ததாக கூறியிருக்கும் அவர், நடிக்கக் கூடாத சில படங்களில் நடித்துவிட்டதாகவும் வேதனைப்பட்டுள்ளார். நடிகை நமீதா அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. பெற்றோருக்கு நான் நடிக்க வந்தது பிடிக்கவில்லை. முதன் முறையாக சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானேன். அப்போது எனக்கு வயது 17.


மேக்கப் ரூமில் இருந்து அரை குறை ஆடையுடன் வெளியே வந்தேன். அதை பார்த்து எனது தந்தை சங்கடப்பட்டார். எனக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. என் அப்பா அவரது தலையில் அடித்தபடி அங்கிருந்து வெளியேறி விட்டார். சினிமாகாரர்களை கேவலமாக பார்க்கும் நிலைமை உள்ளது. அது மாற வேண்டும். நடிகைகளுக்கும் குடும்பம் உள்ளது. உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களை இழிவுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். சினிமாவுக்கு வந்து இத்தனை காலங்களில் நடிக்க கூடாத சில படங்களில் நடித்து விட்டேன். அதை இப்போதுதான் உணர்கிறேன். பிரபலமாக இருப்பதால் சில தொல்லைகளும் இருக்கிறது. ஒரு தடவை ரசிகர் ஒருவர் ஓடி வந்து என் கையை பிடித்தார். நான் பயந்து போய் கையை உதறினேன். பிறகு அந்த ரசிகர் எனது கையை தொட்ட அவரது கைக்கு முத்தம் கொடுத்தபடியே அங்கிருந்து சென்றார். அதை பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த மாதிரி ரசிகர்களும் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன், என்று கூறியுள்ளார்.


நன்றி: இணையம் 
Tags: