இலங்கை அவுஸ்திரேலியாஅணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 6 ம் திகதி இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. இச்சுற்றில் 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு இருபது-20 போட்டிகள் நடைபெறவுள்ளன.டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. மைக்கல் கிளார்க் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களாக நாதன் லியான், மைகல் பீர் இடம் பெற்றுள்ளனர். அறிமுக வேகப்பந்து வீச்சாளர்களாக டிரென்ட் கோப்லேண்ட், ஜேம்ஸ் பெட்டின்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸி. டெஸ்ட் அணி: மைக்கேல் கிளார்க் (தலைவர்), ஷேன் வொட்சன், பிலிப் ஹியூஸ், ரிக்கி பொன்டிங், மைக்கல் ஹஸி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பிராட் ஹெடின், மிட்செல் ஜொன்சன், ரியான் ஹரிஸ், பீட்டர் சிடில், டிரென்ட் கொப்லேண்ட், ஜேம்ஸ் பெட்டின்சன், நாதன் லியான், மைக்கல் பீர்.
இப்போட்டிகள் உலக கிண்ண போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட பல்லேகல மற்றும் ஹம்பந்தோட்டை புதிய மைதானங்களிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores