கிறீன்லாந்திலிருந்து உடைப்பெடுத்த மிகப் பெரிய பனிக்கட்டியொன்று கனடாவின் நியுபவுண்லேண்ட் கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் அப்பகுதியூடாக பயணிக்கும் கப்பல்கள் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப் பனிக்கட்டியின் நீளம் 6.2 மைல்கள் என்பதுடன் அகலம் 3.1 மைல்களாகும்.
இது கடந்த வருடம் கீறீன்லாந்தில் உள்ள பீட்டன்மேன் பனிப்பாறையிலிருந்து உடைந்து விழுந்த கட்டியென தெரிவிக்கப்படுகின்றது.
அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட வெப்ப அதிகரிப்பே இது உடைந்து வீழ்ந்ததிற்கான காரணமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சராசரியாக 6 முதல் 7 மைல்கள் வேகத்தில் இது நகர்ந்துவருவதாகவும் சிலவேளைகள் 11 மைல்கள் வேகத்தினை அடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பாரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லாத போதிலும் செய்மதித் தொழிநுட்பத்தின் மூலம் இதனை அவதானித்துவருவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி: இணையம்
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores