HUTCH SHOP திட்டத்தின் கீழான HUTCH வாடிக்கையாளர் சேவை நிலையமொன்று அண்மையில் இரத்தினபுரியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, பிரதான வீதி, இலக்கம் 72 என்ற முகவரியில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த வாடிக்கையாளர் நிலையம், HUTCH SHOP திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 12ஆவது வாடிக்கையாளர் நிலையமாகும். HUTCH நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஆனந்த் பிரகாஷ் தலைமையில் இடம்பெற்ற HUTCH வாடிக்கையாளர் நிலையத் திறப்பு விழாவில் சப்ரகமுவ மாகாண சபை அங்கத்தவர் காஞ்சன ஜயசிங்க உட்பட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்வாண்டு முடிவடைவதற்குள் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கண்டி, மாத்தளை மற்றும் வவுனியா ஆகிய நகரங்களிலும் HUTCH SHOP வாடிக்கையாளர் சேவை நிலையங்களைத் திறந்துவைக்க சகல ஏற்பாடுகளையும் HUTCH நிறுவனம் செய்துள்ளது.
தமது வாடிக்கையாளருடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதுடன், அவர்களுக்குத் தேவையான சகல சேவைகளையும் வழங்குவதே HUTCH வாடிக்கையாளர் நிலையங்களின் பிரதான குறிக்கோளாகும்.
புதிய இணைப்புகளை விரைவாக ஏற்படுத்திக் கொடுத்தல், விசேட சேவைகளை வழங்குதல், ஊக்குவிப்புத் திட்டங்களில் வாடிக்கையாளரை இணைத்தல், HUTCH இணைப்புகள் தொடர்பான வாடிக்கையாளரின் சந்தேகங்கள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என்பவை HUTCH வாடிக்கையாளர் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகளாகும்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores