மர்ம மனிதர்கள் சிலர் கைது செய்யபட்டனர்

இரண்டு, மூன்று நாட்களாக மர்ம மனிதர்கள் பற்றிய தகவல் நாட்டின் பல பாகங்களிலும் முக்கிய சங்கதியாக இருந்து வருவது யாவரும் அறிந்தததே. இவர்கள் முகத்தில் கிரீஸ் பூசிக்கொண்டு மக்களை, குறிப்பாக பெண்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்ததாக  தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில்
பதுளை மற்றும் ராகலை பகுதிகளில் 10 சந்தேக நபர்கள் மக்களின் தகவல்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளனர். 

ராகலை பகுதியில் கிராமத்தவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்த நான்கு சந்தேக நபர்கள் மக்களின் தொலைபேசி தகவலின் அடிப்படயில் கைது செய்யப்பட்டுள்ளனர், மற்றும் பதுளை பகுதியில் 6 பேரும் கைது செய்ய பட்டுள்ளனர்.

மேலும் இவ்வாறான சநதேக நபர்கள் பற்றி பொலிசார் மேலும் விசாரணைகளையும், தேடுதல்களையும் முடக்கி விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Tags: ,