
கோளாவில் கிராமத்தில் குமார் கடை வீதியிலுள்ள 20 வயதுடைய ஜெகன் சோதிமலர் என்னும் ஒருவயது குழந்தைக்கு தாயான இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு கிறீஸ் மனிதனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்தவராவார்.
இதுபற்றி தெரியவருவதாவது:
நேற்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் அவரது வீட்டிலுள்ள மலசல கூடத்திற்கு கறித்த பெண் சென்றபோது மலசல கூடத்திற்குள் மறைந்திருந்த இரு கிறீஸ் மனிதர்கள் அவரை பிடித்து கை, கால்களை கம்பியினால் கட்டி வாயை சலோரேப்பினால் ஒட்டிய போது அருகிலுள்ள வீட்டின் பெண் ஒருவர் கண்டு கூச்சலிட்டதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடித் தப்பியுள்ளனர்.
அவர்களது தாக்குதலினால் அந்த இளம்பெண் காலில் சிறுகாயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று மாவட்ட மருத்துவமனையில் சோ்க்கப்பட்டார்.
இதனையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸார் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதலை நடாத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்
அந்தநிலையில் அங்கு வரவழைக்கப்பட்ட இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்து அவ்விட்டதைவிட்டு கலைத்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தினையடுத்து கோளாவில் கிராமத்து மக்கள் பெரும் அச்சமும் பீதியுமடைந்துள்ளனர்.