கவர்ச்சி நடிகை சில்க் வேடத்தில் நடிப்பேன்; ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று முன்பு ஒரு பேட்டியில் கூறி, எக்கச்சக்க விமர்சனத்துக்கு ஆளான வித்யாபாலன் மீண்டுமொரு பேட்டியால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தால் கவர்ச்சியாகத்தானே நடிக்க வேண்டும். ஆனால் அம்மணி அதற்கு மாறாக நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தார். ஒருவழியாக அவரை சரிகட்டிய படக்குழுவினருக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் வித்யா.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், எந்த வகையான காஸ்ட்யூமும் தனக்கு ஓ.கே தான்;ஆனால் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் வித்யா பாலன். தற்போது ஐதராபாத்தில் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார்.
அவரிடம்தான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வித்யா. ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாம்? என்று அம்மணியிடம் கேட்டால், ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும் பட்டவர்த்தனமாக தெரியும். அதை நான் விரும்பவில்லை என்று கூறுகிறாராம். என்னத்த சொல்ல?
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
