பிரம்மாண்டமான பரிசுகளை வெல்லும் மொபிடேல் ரீலோட் விற்பனையாளர்கள்

மொபிடெல் றீலோட் விற்பனையில் ஈடுபட்டுள்ள பெறுமதிமிக்க விற்பனைப் பங்காளர்களுக்கு அவர்களது பெறுமதிமிக்க பங்களிப்புகளுக்கு வெகுமதியளிக்கும் ஒரு முன்னெடுப்பான SMART விற்பனையாளர் றீலோட் வெகுமதிப் போட்டியில் வெற்றிபெற்ற மூன்றாவது தொகுதி வெற்றியாளர்களுக்கான பரிசுகளை தேசிய மொபைல் சேவைகள் வழங்குனரான ஸ்ரீலங்கா ரெலிக்கொம் மொபிடெல் அண்மையில் வழங்கியிருந்தது.

2011 மார்ச் 15 அன்று ஆரம்பித்திருந்த இந்த போட்டி 2011 யூன் 15 வரை தொடர்ந்தும் இடம்பெற்றிருந்ததுடன், மொபிடெல் றீலோட் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் மாதந்தோறும் 10 பஜாஜ் டிஸ்கவர் 100சீசீ மோட்டார்சைக்கிள்களையும், M3 மொபிடெல் அதிவேக இணைய டொங்கல்கள் உள்ளடங்கிய 20 மடிகணினிகளையும் வெல்வதற்கான வாய்ப்பை இந்தப் போட்டி அவர்களுக்கு வழங்கியிருந்தது. மே 15 முதல் யூன் 14 வரையிலான காலப்பகுதிக்காக இடம்பெற்ற சீட்டிழுப்பில் பஜாஜ் டிஸ்கவர் 100சீசீ மோட்டார்சைக்கிள்களை வென்றுகொண்டவர்களின் விபரம் வருமாறு,

எஸ்.எஸ்.என். காந்தன் - கொள்ளுப்பிட்டிய ஸ்ரோர்ஸ், கொழும்பு 03, எஸ். ராமச்சந்திரன் - உமேஷ் டிரேட்ஸ் அன்ட் கொமினிகேஷன், கொழும்பு 08, ஜீ. கெலும் அருண - மிஷன் எலக்ட்ரோனிக்ஸ் அன்ட் கொமினிகேஷன், மொனராகலை, ரீ. தீபால் கமகே - தரங்க டெயிலர்ஸ் அன்ட் மியூசிக் சென்டர் - புத்தல, எல்.எச்.பீ.பீ. நந்தசிறி - கிறிஷhன் கொம், குருணாகல், ரோஹண புஷ்பகுமார - நம்பர் 1 குறோசரி - பலாங்கொடை, எஸ். தனராஜா - தனலஷ்மி ஸ்ரோர்ஸ், லுணுகல, ஏ.ஏ. பிரசன்ன குரேரா - அகஸ்டீன் கிராபிக்ஸ், நீர்கொழும்பு, ரீ.பீ. ஷிரோமனி - ஷிரோமி புக் ஷொப் - வத்தளை மற்றும் எம்.என்.எம். ஷிரான் - சிக்ஸ் பீ போன் ஹவுஸ், பொலன்னறுவை.


Tags: