ரஜினி சிங்கப்பூரிலிருந்து வந்ததும், கேளம்பாக்கத்தில் பண்ணை வீட்டில் தங்குவார் என்று கூறப்பட்டது. இல்லையில்லை, போயஸ் கார்டனில்தான் தங்குவார் என சிலர் கூறிவந்தனர்.
ஆனால் உண்மையில் ரஜினி இப்போது தங்கியிருப்பது வீனஸ் காலனியில் உள்ள மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டில்.போயஸ் கார்டனில் இன்னும் புதுப்பிப்புப் பணிகள் முடியவில்லையாம். வாஸ்து மற்றும் ரஜினியின் வசதிப்படி இன்னும் சில வேலைகள் நடந்து வருகின்றன.
ஆரம்பத்தில் கேளம்பாக்கம் பண்ணை வீட்டுக்கு போகத்தான் ரஜினி விரும்பினாராம். பண்ணை வீடும் பக்காவாக தயார் செய்யப்பட்டது. ரஜினி அங்கே தங்கப்போவதை அறிந்து போலீஸ் பாதுகாப்பையும் அந்தப் பகுதியில் பலப்படுத்தியிருந்தது தமிழக அரசு.
ஆனால் பேரக் குழந்தைகள் யாத்ரா, லிங்காவை பார்க்க முடியாது என்பதாலும், நகரை விட்டு தூரமாக இருப்பதாலும் பண்ணை வீட்டுக்கு போகும் யோசனையைக் கைவிட்டாராம் ரஜினி.
ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு இருக்கிறது. கணவர் தனுஷ் மற்றும் குழந்தைகளுடன் அவர் அந்த வீட்டில் வசிக்கிறார். அங்குதான் இப்போது ரஜினி தங்கியுள்ளார். அவர் தங்குவதற்காக அவ்வீட்டின் அறைகள் பிரத்யேகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன.
பேரக்குழந்தைகளுடன் விளையாடுவது ரஜினிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என்பதாலும், குடும்பத்தினர் அனைவரும் அவர் உடனிருந்து நன்கு கவனித்துக் கொள்ள முடியும் என்பதாலும் ரஜினியின் இந்த புதிய முடிவை அனைவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.
அவ்வப்போது படவேலைகள் தொடர்பான கலந்துரையாடலை மட்டும் கேளம்பாக்கத்தில் வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
