Posted by Loyal Tipon 4:32 PMin
சினிமா|
0
comments
ராம் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் வி.ராமதாஸ் தயாரிப்பில், நாயகன் பரத் - நாயகி ரீமா கலிங்கல் இருவரின் நடிப்பில் ”யுவன் யுவதி” விரைவில் வெளிவர உள்ளது. இந்தப்படத்தை ”நினைத்தாலே இனிக்கும்” ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு கதை எழுதும் போதே என் மனதில் பரத்தின் உருவம் தான் நிழலாடியது. அவரின் இளமை துள்ளும் வயது, கட்டான தோற்றம், கச்சிதமான நடிப்பு, திறமை என படத்திற்கு தேவையான அத்தனையும் ஒன்றாக இணைந்திருந்தது. அதனால் நாயகன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார்.
மலையாளத்தில் ”ரித்து” என்ற படத்தில் ரீமா கலிங்கல் நடித்த விதம் என்னை மிகவும் கவர்ந்து இழுத்தது. அவரை சென்னைக்கு அழைத்து பேசினோம். தமிழ் பேசத் தெரிந்த நடிகை என்பதால் சிரமம் ஏதுமின்றி நடித்து கொடுத்தார். திறமையான நடிகை அவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.