"மங்காத்தா" நானே வெங்கட் பிரபுவிடம் கேட்டு நடித்த படம்: அஜித்



"வென்கட் பிரபு அண்மையில் க்ளவுட் நைன் மூவீசுக்காக ஒரு படம் செய்வதாக கேள்விப்பட்டேன். அதன் பிறகு நானே அவரிடம் கேட்டு நடித்திருக்கும் படம் தான் இந்த மங்காத்தா என்று  ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அஜித் குமார் தெரிவித்தார்".

மேலும் அவர் "நானும்  வென்கட் பிரபுவும் ஜி படத்தில் நடிக்கும் போது  வென்கட் பிரபுவிடம், ஏதாவது வாலி போன்ற கதைகள் இருந்தால் ஒன்றாக செய்வோம்  என்று கேட்டிருந்தேன். அதன்பின் நான் பில்லா, அசல்  போன்ற ப்ராஜெக்ட்களில் பிஸியாக இருந்தாதால் வெங்கட் பிரபு வுக்கு கால் சீட் வழங்கமுடியவில்லை, அதற்கு சந்தர்ப்பம் இப்போதுதான் அமைந்துள்ளது"

"நான் மங்காத்தா பற்றி அதிகம் பேச விருமபவில்லை, மங்காத்தா திரைப்படத்தில் எனது பெயர் விநாயக் கௌதம். நான் இப்போது பில்லா 2 படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருகின்றேன் " என்றும் அவர் கூறினார் 


Tags: