நோயாளிகள் மூவரை கொலை செய்த இங்கிலாந்து தாதி

இங்கிலாந்தில் உள்ள ஸ்டாக்போர்ட் நகரில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது.   இங்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்ச் கிப் (வயது 84), லான் செஸ்டர் (71), டிரேசி ஆடன் (44). ஆகியோர் திடீரென மரணம் அடைந்தனர்.
இவர்கள் நோய் தாக்கம் காரணமாக உயிர் இழக்கவில்லை. அதிக வீரியம் கொண்ட மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிந்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
எனவே இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.  அவர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த ஆஸ்த்திரியில் பணிபுரிந்து வந்த ரெபேக்கா லிங்ஸ்டன் என்ற நர்சு 3 பேரையும் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த குளுக்கோஸ் பாட்டிலில் இன்சுலின் மருந்தை ஊசி மூலம் ஏற்றி 3 பேரையும் அவர் கொலை செய்துள்ளார்.
இதேபோல் மேலும் 12 பேருக்கு அவர் குளுக்கோசில் இன்சுலின் மருந்தை செலுத்தி இருந்தார். ஆனால் அவர்கள் உயிர் பிளைத்துக் கொண்டனர்.   ரெபேக்கா லிங்ஸ்டனை போலீசார் கைது செய்தனர். 3 பேரையும் கொன்றதற்கான காரணம் பற்றிய தகவல் வெளியிடவில்லை. அவர் மனவிரக்தியால் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
  
நன்றி: இணையம்
Tags: