தங்காலை- கொழும்பு பஸ்ஸில் தான் பயணம் செய்தபோது தனக்குரிய மிகுதிக்காசை கொடுக்க மறுத்த நடத்துனர் தகாத வார்;த்தைகளால் திட்டியதாக அப்பெண் தெரிவித்தார். அவர் எனக்கு 5 ரூபா கொடுக்கவேண்டியிருந்தது. ஆனால் 2 ரூபாவையே கொடுத்தார்.
மிகுதிக்காசை நான் நினைவூட்டியபோது அவர் சத்தமிட்டு, நான் வேறு பஸ்ஸில் போக வேண்டும் என்றார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது மிகுதிக்காசை வைத்துக்கொள்ளுமாறு அவரிடம் கூறினேன். அவர் கோமடைந்து எனது முகத்தில் துப்பி தகாத வார்த்தைகளால் திட்டினார். அதைப்பார்த்து பஸ் சாரதி சிரிக்க ஆரம்பித்தார், என அப்பெண் தெரிவித்தார்.பஸ் என்னை கடந்தபோது, முகத்தில் எச்சில் வடிந்த நிலையில் நான் அதிர்ந்து போனேன். அருகிலிருந்தவர்கள் எனது உதவிக்கு வந்தனர். பயணிகளை இவ்வாறு தொந்தரவுக்குள்ளாகும். பஸ் நடத்துனர்களுக்கும் சாரதிகளுக்கும் எதிராக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அண்மையில் போக்குவரத்து அமைச்சர் பஸ்களில் CCTV கமரா பொருத்தி பஸ் நடத்துனர்கள், பஸ்களில் பெண்களுக்கு நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் என்பனவற்றை கண்காணிப்பத்ற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores