விளையாட்டு
»
பேஸ்புக் பக்கத்தில் பெக்கமின் பெண் குழந்தை
பேஸ்புக் பக்கத்தில் பெக்கமின் பெண் குழந்தை
Posted by Loyal Tipon 5:18 PMin
விளையாட்டு|
0
comments
இங்கிலாந்து காற்பந்து வீரர் டேவிட் பெக்கமுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. ஹார்பெர் செவென் என பெயர்வைத்தரகள். பெக்கமின் மனைவி விக்டாரியாவுடன் இக்குழந்தை இருக்கும் புகைப்படத்தை முதன் முறையாக தனது பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றினார் பெக்கம்.
எனது இரு பெண்கள் நித்திரை செய்யும் காட்சியை நான் புகைப்படம் எடுத்துள்ளேன் எனக்கூறியிருந்தார். இதே போன்று விக்டாரியா பெக்கமும் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இது தந்தையின் பெண்' என குறிப்பிட்டு பெக்கமுடன் குழந்தை இருக்கும் காட்சியை தரவேற்றினார்.
இந்த இரு படங்களுமே சமீபத்திய சென்ஷேஷனல் ஹாட் படங்களாக இணையத்தில் உலாவுகின்றன.
பெக்கமுக்கு இது முதல் பெண் குழந்தை என்பதால் உற்சாகத்திலிருக்கும் அவர் நேற்று ரியல் மட்ரிட்டுடனான போட்டியில் விளையாடினார். அப்போது புரூக்லின், ரோமியோ, குரூஸ், ஹார்பெர் என தனது நான்கு பிள்ளைகளினதும் பெயர் பதித்த பாதணிகளை அணிந்திருந்தார்.
ஆனால் இந்த போட்டியில் பெக்கமின் LA கலெக்சி அணி, ரியெல் மட்ரிட்டிடம் 4-1 என தோல்வி அடைந்திருந்தது.