ஸ்டிராஸ்கான் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண் பேட்டி


சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவரான டொமினிங் ஸ்டிராஸ்கான் மீது பாலியல் குற்றம் சாட்டிய அமெரிக்க ஹொட்டல் பெண் ஊழியர் நபிசேடா டயாலோ முதன் முதலாக பேட்டி அளித்துள்ளார்.நியூயோர்க் சோபிடல் ஹொட்டலில் இந்த ஆண்டு மே 14ம் திகதி பணியில் இருந்த போது தன்னை ஸ்டிராஸ்கான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என நபிசேடா குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டால் ஸ்டிராஸ்கான் ஐ.எம்.எப் பதவியை இழந்ததுடன் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
அவர் மீது பாலியல் குற்றம்சாட்டிய நபிசேடா முதன் முறையாக நடந்த சம்பவம் குறித்து நியூஸ்விக் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது: மே 14ம் திகதி நடந்ததாக கூறப்பட்ட சம்பவம் உண்மையானது. எந்த வித பரபரப்புக்காகவும் நான் கூறவில்லை என்றார்.
62 வயது ஸ்டிராஸ்கான் செய்த தவறுக்கு சிறைத்தண்டனை பெற வேண்டும் என விரும்பினேன். சில இடங்களில் அதிகாரத்தையோ, பணத்தையோ பயன்படுத்த முடியாது என்றும் அந்த பெண் பேட்டியில் கூறியுள்ளார்.
நபிசேடாவுக்கு 32 வயது ஆகிறது. அவர் கினியாவில் இருந்து நியூயோர்க் ஹொட்டலுக்கு வந்தவர் ஆவார். இந்த சம்பவத்தால் பணி இழப்பு பிரச்சனையும் ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். ஸ்டிராஸ்கான் மீது பாலியல் பலாத்கார முயற்சி உள்பட 7 குற்றச்சாட்டுகள் உள்ளன.
Tags: