சச்சின் கடுமையான காய்ச்சலால் அவதி


கடுமையான காய்ச்சல் காரணமாக சச்சின் 4ஆம் நாள் ஆட்டத்தில் களமிறங்கவில்லை. லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சச்சின், சர்வதேச போட்டிகளில் தனது 100ஆவது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் நடந்த 3ஆம் நாள் ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், சச்சின் கடுமையான காய்ச்சலுடன் விளையாடியிருப்பதாக தெரியவந்துள்ளது. காய்ச்சலில் அவதிப்பட்ட சச்சின் ஆட்டமிழந்ததும், ஓய்வெடுக்க நேராக ஹோட்டலுக்கு சென்று விட்டார். அவர் மருந்துகள் சாப்பிட்டு, முழு ஓய்வில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால், நேற்றைய 4ஆம் நாள் ஆட்டத்திலும் சச்சின் களத்தடுப்பு செய்ய வரவில்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி, சச்சின் பிற்பகலுக்குப் பிறகு களமிறக்கப்படலாம் என அணி நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். 2ஆவது இன்னிங்சில் சச்சின் களத்தடுப்பு செய்யாவிட்டால், அவர் 5ஆவது விக்கெட்டுக்கு பிறகுதான் துடுப்பாட்டம் செய்ய வர வேண்டுமென கிரிக்கெட் விதிமுறை இருப்பதாக கூறப்படுகிறது. 


நன்றி: இணையம் 
Tags: