இலங்கை கிரிக்கெட் சபையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பு


உபாலி தர்மதாச தலைமையிலான இலங்கை கிரிக்கெட்டின் புதிய இடைக்கால குழுவானது, தற்போது சபையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்காக சபையின் தலைமை காரியலத்தில் பணி புரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளது.

2011 உலக கிண்ணத்திற்காக பல்லேகல மற்றும் ஹம்பாந்தோட்டை மைதானங்கள் அமைப்பதற்காக பெரும் செலவுகள் ஏற்பட்டதால், உலகக்கிண்ண போட்டிகளை தொடர்ந்து கிரிக்கெட் சபை இன்னும் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றது. இலங்கை விளையாட்டு அமைச்சினால் ஜூன் 1 இல் நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால குழுவிற்கு பொருளாதார சிக்கல் தொடர்பாக கவனிப்பதே முக்கிய பணியாக   காணப்படுகிறது.

"இதனால் நாங்கள்  தலைமை காரியாலத்தில் பணிபரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை 82 இலிருந்து 50 ஆக குறைக்கவுள்ளோம்" என்று தர்மதாச குறிப்பிட்டார். இதனை மேலும் 30 ஆக குறைப்பதே எமது இலக்கு எனவும் தற்போதுள்ள விடயங்களை கன்காணிப்பதற்கு இவ் ஊழியர் தொகை போதுமானதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நன்றி: espncricinfo.com
Tags: , ,