வலைப்பக்கங்களை pdf போர்மட்டில் சேவ் செய்ய

வலைப்பக்கங்கள் பொதுவாக HTML போர்மட்டில் மட்டுமே இருக்கும். இதனை நாம் பிடிஎப் மற்றும் இமேஜ் போர்மட்களில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

இதனை நாம் பயர் பொக்ஸ் மற்றும் குரோம் உலவிகளில் செய்ய முடியும். பிடிஎப் மற்றும் இமேஜ் கோப்புகளாக மாற்றுவதால் நாம் இதனை உலவிகளின் துணை இல்லாமலே காண முடியும்.
இந்த நீட்சியில் மூலம் நாம் வலைப்பக்கத்தில் உள்ள எழுத்து, படம் போன்றவற்றை இணைத்தோ இல்லையெனில் வெறும் எழுத்துக்களை மட்டுமோ தனியாக சேமித்துக் கொள்ள முடியும். 

இந்த நீட்சிகளை குறிப்பிட்ட உலவிகளில் நிறுவிக் கொள்ளவும். பின் உலவிகளை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீட்சிக்கான சுட்டி உங்கள் உலவியில் இணைக்கப்பட்டிருக்கும்.
அதை பயன்படுத்தி எந்த வலைப்பக்கத்திற்கு சென்றாலும் அந்த வலைப்பக்கத்தினை பிடிப் மற்றும் இமேஜ் போர்மட்களில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். 

இந்த நீட்சியின் மூலம் நாம் இமேஜ் கோப்புக்களை JPEG, PNG, GIF, BMP மற்றும் பல்வேறு போர்மட்களில் சேமித்துக் கொள்ள முடியும். பிடிஎப் கோப்புக்களை A4, A3, Legal, B10 மற்றும் பல்வேறு போர்மட்களில் சேமித்துக் கொள்ள முடியும். 

பயர் பொக்ஸ்  உலவியில் நீட்சிக்கான ஐகான் தெரியவில்லையெனில் Ctrl + / கீகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் காணமுடியும். இல்லையெனில் View -> Toolbars -> Add-on Bar வழியாகவும் இந்த நீட்க்காண ஐகானை காண முடியும்.
Tags: