விஜயின் அடுத்த படம், "யோகன்: அத்தியாயம் ஒன்று " Mission1: New York City

தமிழ் சினிமாவில் கெளதம் மேனன் விஜய்  இணையும் வசந்த காலம் இதுவென்றுதான்  கூறவேண்டும். பல வருடங்களாக விஜயுடன் இணையும் கெளதம் மேனனின்  முயற்சி கை கூடாத நிலையில். இனிமேலாவது இக்குறையை நீக்க வேண்டும் என்று இருவரும் கைகோர்க்கும் புதிய படம் "யோகன்: அத்தியாயம் ஒன்று " என்று பெயரிடப்பட்டுள்ளது. நியூயார்க் சிட்டி: மிஷன் 1 உபதலைப்புமிடப்பட்டுள்ளது.

வாரணம் ஆயிரம், வின்னைதாண்டிவருவாயா  போன்ற பல வெற்றி படங்களை தந்த வெற்றி இயக்குனரான கெளதம் மேனன் தற்போது விஜயுடன் சேர்ந்து அசத்த போகும் இத்திரைப்படமானது ஹாலிவுட் தரத்தில் பெயரிடப்பட்டுள்ளது விஜய், கெளதம் மேனன் ரசிகர்களிடையே பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது

படத்திற்கான கதாநாயகி மற்றும் ஏனைய படக்குழு தொடர்பில் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என பிரபல சினிமா தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது


Tags: