மங்காத்தா திரையரங்கு உரிமை ராதிகாவிடம்

மங்காத்தா திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனம் பெற்றுக்கொண்டது.

ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி உலகம் முழுவதும் மங்காத்தா திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிடவுள்ளனர். இதில் வெளிநாட்டு விநியோக உரிமையினை ஐங்கரன் தட்டிக்கொண்டது. தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளில் படத்தினை ராடன் மீடியா வெளியிடவுள்ளதாம்.


மங்காத்தா படம் உலகம் முழுவதும் ஒகஸ்ட் 31ம் திகதி வெளியாகும் அதே வேளை கேரளாவில் குறித்த தினத்தில் திரையரங்கு கிடைக்காததனால் செப்டம்பர் 9ம் திகதி படத்தினை வெளியிட திட்டமாம்.
Tags: