காஞ்சனா படத்தின் வெற்றியின் மூலம் பிஸியான நடிகர்

காஞ்சனா படத்தின் வெற்றியின் மூலம் பிஸியான நடிகர், டைரக்டர் என்று மாறிவிட்டார் ராகவா லாரன்ஸ். டான்சராக இருந்து, நடிகராக வளர்ந்து, இயக்குநராக உயர்ந்திருப்பவர் லாரன்ஸ். தமிழ் மற்றும் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கில் சில படங்களை இயக்கியும் உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பு மற்றும் டைரக்ஷ்னில் வெளிவந்துள்ள "காஞ்சனா" படம் சக்க போடு போட்டுக்‌ கொண்டு இருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கிலும் நிறைய வசூலை அள்ளியிருக்கிறது. "காஞ்சனா" வெற்றியால் பிஸியாக மாறிவிட்டார் லாரன்ஸ்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ், அனுஷ்கா நடிக்கும் "ரெபல்" படத்தை இயக்கி வருகிறார். இதனை முடித்துவிட்டு தமிழில் மீண்டும், ராசுமதுரவன் இயக்கத்தில், ஹீரோவாக ஒரு படம் பண்ண இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர முனி-3 எடுக்கும் ஐடியாவிலும் உள்ளார்.

இதுபற்றி லாரன்ஸ் கூறுகையில், காஞ்சனா படத்தின் வெற்றி அனைத்துமே படம் பார்த்த ரசிகர்களை தான் சேரும். அவர்கள் தரும் உற்சாகமும், ஊக்கமும் தான், என்னை அடுத்தநிலைக்கு கொண்டு செல்ல உதவுகிறது என்று கூறி நெகிழ்கிறார்.
Tags: