ஸ்ரீகாந்த், ஜீவா 200 பேர் முன்னிலையில் அம்மணம்

பாலிவுட் ப்ளொக்பஸ்டர் திரைப்படமான 3 idiots இனை இயக்குனர் ஷங்கர் தமிழில் நண்பன் என ரீமேக் செய்வது அனைவரும் அறிந்ததே, இதில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிக்கின்றனர்.

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், 3 idiots திரைபடத்தில் இடம்பெற்ற எம் அனைவரையும்  கவர்ந்த காட்சியான,  கேம்பஸ் முதலாம் நாளில்  மாதவன், சர்மான் ஜோஷியை  ஹொஸ்டெலில் வைத்து சீனியர்ஸ்  ராகிங் செய்யும்  போது ஹொஸ்டெலிற்குள்  நுழையும் அமீர்கான் தனது  சாதுரியத்தால் சீனியருக்கு ஷாக் கொடுக்கும் காட்சி 
நண்பனில் ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் மிகவும் பக்குவமாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

நண்பனில் ஸ்ரீகாந்த், மாதவனின் கதாபாத்திரத்திலும், ஜீவா, சர்மான் ஜோஷியின் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

கேம்பஸ் முதல் நாள் காட்சியான இக்காட்சிக்கு ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் உடம்பில் எந்த துணியும் இல்லாமல் வெறும் ஜட்டியோடு மட்டும் நடிக்கவேண்டுமென்பது ஷங்கரின் வேண்டுகோளாம். முதலில் தயங்கிய இருவரும் பின்னர் இக்காட்சியை மிகவும் துல்லியமாகவும் பக்குவமாகும் 200 பேர் முன்னிலையில் நடித்து கொடுத்தார்களாம்.


THE TIMES OF INDIA
Tags: