பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் விவரங்களை உங்கள் வாழ்க்கை கல்வெட்டுக்கள் என்று எப்போதேனும் நினைத்ததுண்டா? அப்படி நினைக்க வைக்ககூடிய அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பாஸ்ட் போஸ்ட்ஸ் என்னும் அந்த தளம் பேஸ்புக் மூலம் உங்கள் கடந்த காலத்தை திரும்பி பார்க்க உதவுகிறது. அதாவது சென்ற வருடம் இந்த நாளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நினைத்து பார்க்க வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ்.
வரலாற்றில் இன்று என்று சில நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் கடந்த கால நிகழ்வுகளை தொகுத்தளிக்கின்றன இல்லையா, அதே போல உங்கள் வாழ்க்கையிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை திரும்பி பார்க்க நினைவில் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த தளம்.
கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்தீர்கள் என்று நினைவில் உள்ளதா என்று கேள்வி எழுப்பி அதற்கான பதிலை சுவாரஸ்யமான வழியில் முன்வைக்கிறது இந்த தளம்.
பேஸ்புக் பயனாளிகள் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும் செயல்களையும் பேஸ்புக் சுவர் வழி செய்திகளாக பகிர்ந்து கொள்கின்றனர் அல்லவா? இவற்றை ஒருவரது வாழ்க்கை பதிவின் கல்வெட்டுக்களாக கருதி தினம் ஒரு செய்தியாக மின்னஞ்சல் மூலம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கிறது பாஸ்ட் போஸ்ட்ஸ். (http://pastposts.com/)
இந்த தளத்தில் உறுப்பினரான பின் ஒருவரது பேஸ்புக் சுவர் பதிவுகளில் இருந்து கடத்த கால பதிவுகளில் இருந்து கடந்த ஆண்டு அதே நாளில் பகிர்ந்து கொள்ளப்பட்ட தகவல் தேர்வு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது.
பேஸ்புக்கில் எல்லோரும் பகிர்ந்து கொள்கின்றனரே தவிர அந்த பதிவுகளை பலரும் திரும்பி பார்ப்பதில்லை. அந்த வசதியை தான் புதுமையான முறையில் இந்த தளம் வழங்குகிறது.
இந்த தளம் மூலம் கடந்த ஆண்டு இதே நாளில் என்ன செய்து கொண்டிருந்தோம் என அறிந்து கொள்ள முடிவது பயனாளிகளுக்கு புதிய அனுபவமாகவே இருக்கும். டைரியை புரட்டி பார்ப்பது போல பேஸ்புக் வழியே தங்கள் வாழ்க்கை பிளேஷ்பேக்கில் மூழ்கலாம்.
பேஸ்புக் அனுபவத்தை மேலும் பட்டை தீட்டும் வகையில் பேஸ்புக் சார்ந்து பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானதாக இதனை கருதலாம்.
பேஸ்புக்கின் செல்வாக்கை மீறி அதன் பயன்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்களும் இருக்கின்றன. ஆனால் பேஸ்புக் வெறும் பொழுதுபோக்கு அல்ல என்பதை இது போன்ற தளங்கள் உணர்த்தி வருகின்றன.
- Recent News
- Comments
- மங்காத்தா 31 இல் வெளிவருமா மீண்டும் சந்தேகம்27 Aug 2011
- மங்காத்தா திரையரங்கு உரிமை ராதிகாவிடம்26 Aug 2011
-
dhiyasree bhavani
குறைந்த பட்சம் ,இரண்டு பாடல்கள் ,ஹிட் அடிக்கும்
LoyalTip: எப்பதான் வரும் வேலாயுதம் ஆடியோ?; பதில் வந்தாச்சு · 13 years ago
-
Sorry
இதுவரை வெளிவந்த அனைத்து விஜய் பட பாடல்களும் ஹிட்
இதை நம்பிட்டம்
LoyalTip: எப்பதான் வரும் வேலாயுதம் ஆடியோ?; பதில் வந்தாச்சு · 13 years ago
-
Sorry
விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஆனா மத்தவங்களுக்கு......... குறிப்பா தியட்டர்காரனுங்க பாவம் பீதியில இப்பவே கண்ணக்கட்டுதாம்....
ஓடியோ வந்துட்டா மட்டும்......
LoyalTip: எப்பதான் வரும் வேலாயுதம் ஆடியோ?; பதில் வந்தாச்சு · 13 years ago
-
Ghilli arun
கண்ணா அழாகான படமெல்லாம் ஜெயிக்கிறதும் இல்ல, ஜெயிக்கிறதெல்லாம் அழகான படமுமில்ல ... ஹ ஹ ஹ
-
Ravisj98
அழகான படங்கள் ,,அழகனா படமா இருக்குமா ??
Face Book
Advertisement
Daily Video
Live Scores