கொல்கத்தாவில் லட்சுமி ஸ்டூடியோவில் தீ விபத்து :2 பேர் படுகாயம்

கொல்கத்தாவில் உள்ள பாரத் லட்சுமி ஸ்டூடியோவில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சுற்று வட்டாரத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தீவிபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

மேலதிக தகவல்கள் உடனுக்குடன் தகவல்கள் கிடைக்க பெற்றவுடன் பதிவேற்றப்படும்
Tags: