இலங்கையின் போர்க்குற்றங்களை விபரிக்கும் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற செனல் 4 காணொளி நேற்று அமெரிக்க கெப்பிட்டல் கட்டிடத் தொகுதியில் காண்பிக்கப்பட்டது.
இந்த காணொளி 50 நிமிடங்களை கொண்ட காட்சிகளை உள்ளடங்கியிருந்தது.
இந்த காட்சிப்படுத்தலை அடுத்து கருத்துரைத்த, அமெரிக்க காங்கிரஸின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைத்தலைவர் James McGovern ஜேம்ஸ் மெக்கோவன், குறித்த காணொளி மனிதத்துவத்தின் சீரழிவை எடுத்துக்காட்டியதாக குறிப்பிட்டார்
இந்தநிலையில் குறித்த காட்சிகள் இலங்கையின்; போர்க்குற்றங்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்
மெக்கோவன், அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஜனநாயக கட்சி James McGovern மெசாசூசெட்ஸ் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினராவார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், சர்வதேசம் அந்த இடத்திற்கு பொறுப்பாக செல்லவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
காணொளிக்காட்சிகளின் அடிப்படையில் இலங்கைப்படையினரோ அல்லது தமிழீழ விடுததலைப்புலிகளோ யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மெக்கோவன் வலியுறுத்தினார்.
அமெரிக்காவில் இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை ஒளிப்பரப்புவதற்கு சர்வதேச மன்னிப்பு சபையின் அமெரிக்காவுக்கான முகாமைப்பணிப்பாளர் Adotei Akwei எடோடி அகவெய் ஏற்பாடுகளை செய்திருந்தார்