1800 இற்கும் அதிகமான கொடுப்பனவு மையங்களுடன் ஜனசக்தி

ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, காப்புறுதி கொள்கைகளைப் பெற்றுள்ள நாடெங்கிலும் வாழும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது மாதாந்த காப்புறுதிக் கட்டுப்பண (பிரீமியம்) கொடுப்பனவை செலுத்துவதை மிகவும் இலகுவாக்குவதற்காக அண்மையில் இலங்கையிலுள்ள பிரதான 8 வங்கிகளுடன் கைகோர்த்துள்ளது.

இப்போது இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, எச்.எஸ்.பீ.சி., தேசிய அபிவிருத்தி வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றின் நாடு முழுவதிலும் காணப்படும் கிளைகளில் வாடிக்கையாளர்கள் தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

இந்த பிரதான வங்கிகளுக்கு மேலதிகமாக, 100 இற்கும் அதிகமான கிளைகளைக் கொண்ட ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் கிளை வலையமைப்பின் ஊடாகவும் தமது மாதாந்த காப்புறுதிக் கட்டுப்பண கொடுப்பனவுகளை செலுத்துவதற்கான தெரிவும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.

இதற்கமைய நாடெங்கிலும் உள்ள ஜனசக்தியின் கட்டணம் செலுத்தும் பரந்தளவான மையங்களின் மொத்த எண்ணிக்கை 1800 இனையும் தாண்டியுள்ளது.

இதன்மூலம் இன்றைய திகதி வரை, வாடிக்கையாளர்கள் தங்களது கொடுப்பனவை செலுத்துவதற்கு வசதியாக அதிகளவான மையங்களை நிறுவியுள்ள முதலாவது காப்புறுதிக் கம்பனி என்ற பெருமையை ஜனசக்தி பெறுகின்றது.

ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவு பிரதம அதிகாரி பெடி வீரசேகர கூறுகையில், காப்புறுதி என்பது பிரதான நகரங்களில் வாழும் மக்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை.

புவியியல் எல்லைகளைக் கடந்து நாம், நாடெங்கிலும் வாழும் ஒரு மில்லியன் மக்களின் வாழ்க்கையை தொட்டுள்ளோம். அத்துடன் காப்புறுதியின் பல்தரப்பட்ட அனுகூலங்களையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம்.

அவர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான கொடுப்பனவு மையங்களை ஏற்படுத்துவதானது ஒரு உபாய ரீதியிலான முயற்சியாகும். எமது சிறப்புத்துவத்தை பின்தொடரும் வகையில், இன்று வரைக்கும் தமது வாடிக்கையாளர்களுக்காக அதிகளவிலான கொடுப்பனவு மையங்களை நிறுவிய ஒரேயொரு காப்புறுதி கம்பனியாக திகழ்வதையிட்டு நாம் சந்தோசமடைகின்றோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்றார்.

கடனட்டைகளைப் பயன்படுத்தி ஜனசக்தி இணையத்தளத்தின் ஊடாக கொடுப்பனவு, கிளை வலையமைப்புக்களில் கடனட்டை மூலமான கொடுப்பனவு, வங்கி நிலையியற் கட்டளை மூலமான கொடுப்பனவு, கடனட்டை நிலையியற் கட்டளை கொடுப்பனவு முறை அத்துடன் சம்பளத்தில் இருந்து கழித்துக் கொள்ளும் வகையிலமைந்த கொடுப்பனவு முறை போன்ற நெகிழ்ச்சித் தன்மைகொண்ட பல்வேறு கொடுப்பனவு வசதிகளையும் ஜனசக்தி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

புதிய முன்னெடுப்புக்கள் மற்றும் வாய்ப்புக்களை பின்தொடர்ந்து செல்வதற்கும் முக்கிய திறன்களை கட்டியெழுப்புவதற்கும் அவசியமான சிறப்புத்துவமிக்க முன்மாதிரி ஒன்றை ஜனசக்தி உருவாக்கி வருகின்றது.

எல்லைகளை புதிய மட்டத்திற்கு உயர்த்துவதன் மூலமும் ஒவ்வொரு வருடமும் தராதரத்தை உயர்த்திக் கொள்வதன் ஊடாகவும் இதனை நிறுவனம் அடைந்து கொள்கின்றது. சிறப்புத்துவத்திற்கான இந்த ஊக்கம், சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தந்துள்ளது.

ஜனசக்தி வர்த்தக குறியீட்டினது மிக முக்கிய உள்ளடக்கங்களாக வெளிப்படைத் தன்மை, நம்பத்தகுந்த தன்மை, மனோதிடம் மற்றும் உறுதிமாறாத நிலை என்பவை காணப்படுகின்றன.

இவற்றை அடைந்து கொள்வதற்கான வர்த்தக இலக்குகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பெறுமதிசார் முறைமையின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புத்தாக்க வர்த்தக குறியீடுகளிடையே ஒரு கம்பனி என்ற வகையில் ஜனசக்தி ஸ்திரமான இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற பிரகாசமிக்க 19ஆவது உலக வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருது வழங்கலின் போது, தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் ஜனசக்தி நிறுவனம் இரட்டை கௌரவத்தைப் பெற்றுக் கொண்டது.

இந்நிகழ்வில் வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகளுக்கான விருது மற்றும் ஒட்டுமொத்தமான வர்த்தக குறியீட்டு தலைமைத்துவம் ஆகிய விருதுகளைப் பெற்றதன் மூலமாகவே ஜனசக்திக்கு அந்த கௌரவம் அளிக்கப்பட்டது.

நிறுவனம் மேற்கொண்டுவரும் வர்த்தக குறியீட்டினை கட்டியெழுப்புதல் மற்றும் வர்த்தக குறியீட்டு முகாமைத்துவம் தொடர்பான முயற்சிகளுக்கு கிடைத்த முழுமையான அங்கீகாரமாக இது அமைந்தது.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான விருதுகளைப் பெற்றுள்ள ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனம், தமது வாடிக்கையாளர்களுக்காக தொடர்ச்சியாக பெறுமதிகளை வழங்கி வருகின்றது.

இலங்கை வரலாற்றில் முதன்முதலாவதான இடைநடுவில் பழுதடையும் வாகனங்களுக்கான 24 மணிநேர சேவை வழங்கும் காப்புறுதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்ததன் மூலமாக இலங்கையின் காப்புறுதித் துறையில் ஜனசக்தி நிறுவனம் இன்னுமொரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்துறையில் முதலாவதான ஃபுல் ஒப்சன் வெஹிகிள் எமேர்ஜன்சி பொலிஸி திட்டமானது 24 மணிநேரமும், ஆண்டின் 365 நாட்களும் செயற்படு நிலையில் இருப்பதால் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் ஜனசக்தி அன்லிமிட்டட் காப்புறுதியானது, இலங்கையில் அல்லது உலகளவிலேயே, ஒருவரது வாழ்நாள் முழுவதும் வைத்தியசாலை காப்பீட்டை வழங்கும் ஒரேயொரு காப்புறுதித் திட்டமாக திகழ்கின்றது.

காப்புறுதிக் கொள்கை முதிர்ச்சியடைந்த பின்னரும் காப்பீடு வழங்கப்படும் வகையிலமைந்த இத்திட்டமானது, உலகத்திற்கும் வழமையான ஆயுட்காப்புறுதிகளுக்கும் சவால் விடுப்பதாக அமைந்துள்ளது.

ஜனசக்தி கோல்டன் பொன்ட் ஆனது, முதலீட்டுக்கு வழிவகுக்கும் காப்புறுதியாகவுள்ள அதேநேரம், சந்தையில் கிடைக்கக் கூடியதாகவுள்ள இதுபோன்ற ஏனைய ஆயுட் காப்புறுதிகளுடன் ஒப்பிடுகையில் ஈடுஇணையற்ற பெறுபேற்றுத் திறனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
Tags: