மேன்முறையீட்டை திரும்பப் பெற்றுக்கொண்டார் – சரத்பொன்சேகா

இரண்டாவது இராணுவ குற்றவியல் நீதிமன்ற நியமனங்களுக்கு எதிராக சரத் பொன்சேகா தாக்கல் செய்த சிறப்பு மேன்முறையீட்டினை திரும்பப் பெற்றுக்கொண்டதை அடுத்து கொழும்பு மேல்நீதிமன்றம் சிறப்பு மேன்முறையீட்டினை நிராகரித்துள்ளது. 

இரண்டாவது இராணுவ குற்றவியல் நீதியரசர்கள் நியமனத்தில் பக்கசார்ப்பு தோன்றுவதாக குறித்த சிறப்பு மேன்முறையீட்டை சரத்பொன்சேகா தாக்கல் செய்திருந்தார். 

பிறிதொரு நீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்கு முன்னெடுக்கப்பட்டுவருவதால் சிறப்பு மேன்முறையீட்டினை மீளப்பெறுவதாக சரத்பொன்சேகா தரப்பு சட்டத்தரணி மேல்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இதனைக் கருத்திற் கொண்ட நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு சிறப்பு மேன்முறையீட்டினை நிராகரித்தது.
Tags: