ரசிகர்களுடன் படம் பார்க்கும் 'தெய்வத்திருமகள்' டீம்!

விக்ரம், அமலா பால், அனுஷ்கா, சாரா மற்றும் பலர் நடிக்க விஜய் இயக்கி இருக்கும் படம் 'தெய்வத்திருமகள்'. இப்படம் நேற்று (ஜுலை 15) வெளியாகி திரையிரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.



விக்ரம் வித்யாசமான நடிப்பாலும், படத்தின் கதை ஆகியவற்றின் மூலம் இப்படம் நல்ல ஒப்பனிங் கொடுத்து இருக்கிறது.


விக்ரம் இப்படத்திற்காக முழுவீச்சில் படத்தினை விளம்பரப்படுத்த முனைப்புடன் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் துபாயில் நடந்த பீரிமியர் ஷோவில் கலந்து கொண்டார்.


அதன் பிறகு அன்று இரவே சென்னை திரும்பி நேற்று காலை பத்திரிகையாளர்களுக்கு என்று போடப்பட்ட காட்சியில் கலந்து கொண்டார். அவருடன் சாரா, இயக்குனர் விஜய் மற்றும் யு.டிவி தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பின்னர்,  படக்குழுவினர் சென்னையில் காசி, உதயம், கமலா ஆகிய தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்தவர்களை சந்தித்து பேசினர். பிறகு டி.வி சேனல்கள், எஃப் எம் ரேடியோக்கள் என விக்ரம் இப்படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார்.


இது குறித்து யு.டிவி தனஞ்செயன் தனது டிவிட்டர் இணையத்தில் " விக்ரமுடன் இணைந்து சென்னையில் உதயம், கமலா, காசி ஆகிய தியேட்டர்களுக்கு சென்று வந்தேன். ரசிகர்களின் வரவேற்பு அருமையாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
Tags: