இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை நடத்த முடியாது என்று இந்நீதிமன்றத்தின் தலைவர் சாங் ஹியூங் சொங் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அமெரிக்கா, இலங்கை, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்று கூறி உள்ளார். ரோம் சாசனத்தில் கைச்சாத்து இட்டு இராத நாடுகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் எந்நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.