தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்வியகத்தினால் (NIBM) 252 பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர்

தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்வியகத்தின் (NIBM); முகாமைத்துவ தகவல் திட்ட ((MIS)) பிரிவின் 13 ஆவது வேதியல் துறைகளுக்கான பட்டமளிப்பு வைபவம் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் தலைமைத்துவத்தில் கொழும்பு வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது.  

அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகத்தின் ஓரங்கமான டப்ளின் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த பட்டமளிப்பு வைபவத்தில் 252 பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கப்பட்டதுடன், அதில் 12 பட்டதாரிகளுக்கு முதல் வகுப்பில் சித்தியடைந்தமைக்கான கௌரவ பட்டங்களும், 151 பட்டதாரிகளுக்கு இரண்டாம் வகுப்பில் முதலாம் பிரிவில் சித்தியடைந்தமைக்கான கௌரவ பட்டங்களும், 89 பட்டதாரிகளுக்கு இரண்டாம் வகுப்பில் இரண்டாம் பிரிவில் சித்தியடைந்தமைக்கான கௌரவ பட்டங்களும் வழங்கப்பட்டிருந்தன.  இந்த பட்டமளிப்பு வைபவம் முகாமைத்துவ தகவல் திட்ட கற்கைகள், முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவ போன்ற வேதியல் துறைகளில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சிறந்த மாணவராக முகாமைத்துவ தகவல் திட்ட பிரிவின் டி.ஜி.ஆர். தில்ருக்சி மற்றும் முகாமைத்துவம் மற்றும் மனிதவள முகாமைத்துவ பிரிவுகளில் கே.சி. வலிஹிந்த ஆகியோர் பெற்றிருந்தனர். 

டப்ளின் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்வியகத்தின் முகாமைத்துவ தகவல் திட்ட கற்கைகளின் மூலம் இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டமொன்றை பெற்றுக் கொள்ள முடிவதுடன், உயர்கல்விக்காக தெரிவாவதற்காக வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.  

இதுவரையில் சுமார் 1000 பட்டதாரிகளை முகாமைத்துவ தகவல் திட்ட பிரிவில் தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்வியகம் உருவாக்கியுள்ளது. இந்த கற்கையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை 98 வீதமாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்த பட்டமளிப்பு நிகழ்வில் பட்டங்கள் வழங்கப்பட்ட ஏனைய இரு துறைகளான முகாமைத்துவம், மனிதவள முகாமைத்துவம் போன்றன 2009 ஆம் ஆண்டில் கல்வியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அயர்லாந்தின் தேசிய பல்கலைக்கழகம் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், இந்த பல்கலைக்கழகமானது அயர்லாந்தில் காணப்படும் நான்கு பிரதான பல்கலைக்கழகங்களின் சம்மேளனமாகவும் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்கது.  இந்த பல்கலைக்கழகத்தில் பெருமளவு கற்கைநெறிகள் மாணவர்களின் நலன் கருதி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

20000 மாணவர்களும், 2000 ஊழியர்களும் பணியாற்றுகின்றமை ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துக்கு அமைவாகவும் சர்வதேச தொழிலாளர் ஒன்றியத்தின் ஆதரவுடனும் 1968 ஆம் ஆண்டு விஞ்ஞான விவகார அமைச்சின் கீழ் தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்வியகம் நிறுவப்பட்டது.  தற்போது இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் மேற்பார்வை செய்யப்படும் இக்கல்வியகம் ஐளுழு 9001 சான்றிதழை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கொழும்பில் மாத்திரமன்றி, கண்டி, குருநாகல், காலி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் தனது கிளைகளை கல்வியகம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


நன்றி: இணையம்
Tags: