இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோட்வானியும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் விஜய் ஆண்டனி. இப்படத்தின் பாடல் வெளியிடும் தேதியை அறிவித்திருக்கிறார்கள். எங்களுக்கு கிடைத்த லேட்டஸ்ட் தகவல் அப்படியே உங்களிடம்...
இயக்குனர் ஜெயம் ராஜாவின் தம்பி, நடிகர் ஜெயம் ரவி ஆவார். அவர் அவரது அண்ணனிடம் இப்படத்தின் பாடல் வெளியீடு எப்போது என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜா சொன்ன பதிலை, ஜெயம் ரவி அவருடைய டுவிட்டர் இணைய பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
“விஜய் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தின் பாடல் வெளியீடு குறித்து கேட்டதற்கு. ஆகஸ்ட் 15-ற்குள் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறும் என்று பதிலளித்திருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார் ஜெயம் ரவி.
ஆக இப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 15 அன்று வெளிவரும் எனத் தெரிகிறது. இனி விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தானே.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
