முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான லாரா தத்தா, தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கிறார். பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார் நடிகை லாரா தத்தா. இதையடுத்து கடந்த சில வாரங்களாகவே லாரா தத்தா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை லாரா மறுத்து வந்தார். இந்நிலையில் அவர், தான் தாயாகப்போகும் செய்தியை உறுதிபடுத்தியிருக்கிறார். தற்போது 3 மாத கர்ப்பமாக இருக்கும் லாரா மகிழ்ச்சியில் பூரித்துப்போய் இருக்கிறாராம். மகேஷ் பூபதியும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்துள்ளார்.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அவர்கள், நாங்கள் இருவரும் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளோம். புதிய வரவுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம், என்று கூறியிருக்கிறார்கள். குழந்தையை பெற்றெடுக்கும் வரை லாரா, புதிய படங்கள் எதிலும் நடிக்க மாட்டார் என்றும் மகேஷ் பூபதி கூறியிருக்கிறார்.
- Recent News
- Comments
Face Book
Advertisement
Daily Video
Live Scores
