பிரபு தேவாவிற்கு ஏமாற்றம் !!

பிரபுதேவா பட சூட்டிங்கிற்கு குறுக்கே நிற்கிறது கோல்கட்டா காளி. வெடி என்ற பெயரில் டைரக்டர் பிரபுதேவா இயக்கி வரும் புதிய படத்தில் விஷால் - சமீரா ரெட்டி ஜோடி நடிக்கிறது. இப்படத்தின் சூட்டிங்கிற்காக சமீபத்தில் கோல்கட்டா சென்றிருக்கிறது படக்குழு. விஷால்-சமீரா உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் காளி தேவி கோயில் முன்பு இறங்கிய பிரபுதேவாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் சூட்டிங் நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இத்தனைக்கும் முன்கூட்டியே கடிதம் கொடுத்து, முறைப்படி அனுமதி பெற்று வைத்திருக்கிறார் மாஸ்டர்.

படத்திற்கு அந்த காளி கோயில் காட்சி ரொம்ப முக்கியமானது என்பதால் விடாப்பிடியாக அங்கு சூட்டிங் நடத்தியே தீர வேண்டும் என்று கோவில் நிர்வாகத்துடன் வாக்குதாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆனாலும் காளி மனசு கரையவே இல்லையாம். ஒரு நாள்முழுவதும் நட்சத்திர பட்டாளத்துடன் காளிதேவி கோயில் முன்பு காத்துக் கிடந்ததுதான் மிச்சம். இப்போது அந்த காட்சியை வேறு எங்கு எடுப்பது என்கிற டிஷ்கஷனில் மூழ்கியிருக்கிறாராம் பிரபுதேவா.
Tags: