பூச்சி போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவால் தண்ணீரில் நடக்க மட்டுமின்றி ஓடவும் முடியும். தண்ணீரில் நடக்கும் ரோபோவுக்கு அசையக்கூடிய தடுப்புகள் போன்ற 2 கால்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதுதவிர தண்ணீரை நீந்தி கடக்கக்கூடிய வகையில் வயர்களால் ஆன 10 கால்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவைகளை இயக்க கூடிய வகையில் 2 மிக சிறிய எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மிகவும் எடை குறைவானது. தண்ணீரில் மூழ்கி மீண்டும் மேல் எழுந்து வரக்கூடியது.
இதுபோன்ற ரோபோக்கள் ராணுவ உளவு பணிக்கும், தண்ணீரில் மாசுபட்டதை கண்டறியவும் மற்றும் பல செயல்பாடுகளுக்கும் பயன்படும் என விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
