வேலாயுதம் புயல் வேகத்தில்

விஜயின் நடிப்பிலும் .Aascar ரவிச்சந்திரன் தயாரிப்பிலும் மற்றும் ஜெயம் ராஜாவின் இயக்கத்திலும் வெளிவரவிருக்கும் திரைப்படமான வேலாயுதத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில், தற்போது டப்பிங் வேலைகள் மிகவும் துரித கதியில் நடந்து வருவாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  

நடிகர் நடிகைகள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் திரைப்படத்தை ஏற்கனவே குறிப்பிட்ட தினத்தில் வெளியிடுவதற்காக மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.

மேலும் இறுதியாக வெளிவந்த விஜயின் திரைப்படமான காவலன் பல எதிர்ப்புகளுக்கு மத்தயிலும்  பெரிய வெற்றியீட்டியதனாலும்,  புதிய மத்திய அரசின் பதவியேற்பின்  பின்னர் வெளிவர இருக்கும் விஜயின் முதலாவது படம் என்பதனாலும்  ரசிகர்களின் மத்தியில் பலத்த
எதிர்பார்ப்பு
நிலவுகிறது.

படத்தின் ஆடியோ வெளியீடு தொடர்பில் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

:சுலேகா 
Tags: