இவர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுக்கும் படி நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றிக்கு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்ட தான், அவர்களின் விசாரணைகளை துரிதபடுத்துவதாக வாக்குறுதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தான் நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளோடு பேச்சு மேற்கொண்டதகாவும் விரைவில் சாதகமான தீர்வு கிடைக்கும் என செயலாளர் திசாநாயக்க குறிப்பிட்டார்.வவுனியா சிறைச்சாலையிலுள்ள நான்கு தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஏழு நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா சிறைச்சாலையிலுள்ள ஏனைய தமிழ் அரசியல் கைதிகளும் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை, உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள 40 வயதான கட்டையன் லோகேஸ்வரன் என்பரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.