அஜித்தின் பில்லா 2 விற்கு புதிய அடையாளம்


அஜித் ரசிகர்களுக்கு இம்மாதம் மிகவும் பிசியாக இருக்கும் போலிருக்கிறது. மங்காத்தா ஆடியோ வெளியீடு, பில்லா 2 படப்பிடிப்புகள் போன்றவற்றுடன்  இன்னுமொன்றும் காத்திருக்கிறது.

பில்லா 2 திரைபடத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பித்த நிலையில், பில்லா 2  குழுவினர் பில்லா 2 விற்கான (logo) அடையா
க்குறியொன்றை அமைப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். இது தொடர்பில் பில்லா 2 விற்கு பொருத்தமான மிகவும் எளிமையான, கலக்கலான அடையாக்குறியொன்றை வடிவமைக்கும் போட்டியொன்று  ரசிகர்களிடம் விடப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்படும் வடிவமைப்புக்கு பல விலை மதிக்கத்தக்க பரிசுகளும், அஜித்தை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும் என படப்பிடிப்பு குழுவின் மிக நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சக்ரி டோலெடியின் இயக்கத்தில் பில்லா 2 வின் படப்பிடிப்புகள் ஹைதராபாதில் நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து கோவா விலும் பின்னர் முக்கியமான சில சண்டை காட்சிகள் வெளிநாடுகளிலும் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: