சூர்யாவுடன் நடிக்க மறுத்தது குறித்து டாப்ஸி விளக்கம்!

“ஆடுகளம்” படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் டாப்ஸி. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.
 
சூர்யாவை வைத்து மாற்றான் படத்தை கே.வி. ஆனந்த் இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க டாப்ஸியை அணுகினார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
 
இதுகுறித்து டாப்ஸி கூறியதாவது:-
 
நிறைய படங்கள் கைவசம் இருப்பதால் மாற்றான் படத்தில் நடிக்க இயலவில்லை. இதை கடைசி படமாக நினைக்கவில்லை. சூர்யா ஜோடியாக நிச்சயம் நடிப்பேன்.
 
கே.வி. ஆனந்த் சிறந்த இயக்குனர். அவர் டைரக்ஷனிலும் நடிப்பேன். இதுவரை 7 படங்களில் நடித்துள்ளேன். எனது பிறந்த நாட்களில் பெற்றோருடன் இருப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். இரவு விருந்துகளில் பங்கேற்று விட்டு மறுநாள் கஷ்டப்பட்டு விழிப்பது எனக்கு பிடிக்காது.
Tags: