மார்க் டகன் இறந்த இடத்தில் காவற்றுறையினர் பயன்படுத்தக்கூடாத ஆயுதங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 55 பேர்வரை கைதுசெய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.100 தடவைகள் ருவிட்டரில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட காவற்றுறைக் கார்கள் எரியும் படங்களால் வன்முறை அதிகமாகியது.
கலகக்காரர்களை அடக்கத் தடியடிப் பிரயோகமும் நாய்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்தும் பேருந்துகளிலும் நகரத் தொடர்வண்டிகளிலும் வந்து அப்பகுதியில் ஒன்றுசேர்ந்ததாகத் தெரியவருகின்றது. இது ஏதாவதொரு சமூக வலைத்தளத்தினூடாகவே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.
எனினும், மார்க் டகனின் உறவினர்கள் டகன் ஒரு கொள்ளைக்காரனோ கலகக்காரனோ அல்லவென்றும் சாதாரணமான ஒரு குடும்பஸ்தனே என்றும் அவரைக் காவற்றுறையினர் கொன்றிருக்கவேண்டிய அவசியமென்ன என்றும் கேள்வி கேட்கின்றனர்
ஆனால் மார்க் டகனின் இறப்பிற்கு அனுதாபம் தெரிவிக்கும் ஸ்கொட்லன்ட் யாட் காவற்றுறையினர் இதற்குப் பதிலாக ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்றும் பொதுமக்களின் கடைகளையும் வாகனங்களையும் எரிக்கவேண்டிய காரணமென்னவென்றும் எதிர்க்கேள்வி கேட்கின்றனர்.