ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜொப்ஸ் ராஜினாமா

அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளைப் போல அப்பிள் நிறுவனம் தொடர்பான செய்திகளுக்கும் பஞ்சமில்லை. தற்போது வெளியாகியிருக்கும் செய்தியானது அப்பிள் நிறுவனத்திற்கு பாரிய சவாலை ஏற்படுத்துமென தெரிகிறது.

அப்பிள் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் ஜொப்ஸ் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளா. அப்பிளின் தந்தை என வர்ணிக்கப்படும் ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் எட்ட முடியாத வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர். 1997 ஆம் ஆண்டு முதல் இவர் இப்பதவியை வகித்துவந்தார். இவருக்கு அடுத்த படியாக இப்பதவியை டிம் குக் ஏற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் தற்போது அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்டீவ் ஜொப்ஸ்(56) தனது ராஜினாமா கடிதத்தினை அப்பிள் நிர்வாக சபையிடம் நேற்று புதன்கிழமை கையளித்துள்ளார்.


கடந்த சில காலங்களாக அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவரது ஆயுட்காலம் சிறிது நாட்களே என செய்திகளும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: