உலக சாம்பியன் இங்கிலாந்திடம் சுருண்டது

இங்கிலாந்து
1வது இன்னிங்ஸ் 221/10 (பிரோட் 64, இயன் பெல் 31, பிறவீன் 3-45)

2வது இன்னிங்ஸ் 544/10 (இயன் பெல் 159, பிரஸ்னன் 90, பிறவீன் 4-124)


இந்தியா

1வது இன்னிங்ஸ் 288/10 (ட்ராவிட் 117, யுவராஜ் சிங் 62, பிரோட் 6-46)

2வது இன்னிங்ஸ் 158/10 (சச்சின் 54, ஹர்பஜன் சிங் 46, பிரஸ்னன் 5-48)


டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 319 ஓட்டங்களால் படுதோல்வியடைய செய்தது.


479 ஓட்டங்கள் என்ற பாரிய இலக்கை விரட்டிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 5 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் 2-0 என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.


இந்திய அணி சார்பில் கிரிக்கெட்டின் கடவுள் என நம்பப்படும் சச்சின் 56 ஓட்டங்களையும், ஹர்பஜன் சிங் 46 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.


இங்கிலாந்து சார்பில் பிரஸ்னன் 5 விக்கெட்டுக்களும், அண்டர்சன் 3 விக்கட்டுக்களையும் பிரோட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.


முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்களையும் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிய ஸ்டுவர்ட்  பரோட் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
Tags: