மங்காத்தா வெளியீட்டில் சிக்கல்; ஒதிங்கிக்கொண்டார் அஜித்

மங்காத்தா பட ரிலீஸில் திடீர் சிக்கல் எழுந்துள்ளது. அந்த சிக்கலில் தலையிடாமல் அதில் இருந்து படத்தின் ஹீரோ நடிகர் அஜீத் ஒதுங்கிக் கொண்டாராம். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் “மங்காத்தா”. நடிகர் அஜித், நடிகை த்ரிஷா நாயகன், நாயகியாக நடித்திருக்கம் இப்படம் வரும் 30ம்தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு ஏற்கனவே அறிவித்துள்ளார். மங்காத்தா ரிலீசுக்காக அஜீத் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தை வெளியிட திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மங்காத்தாவை மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான கிளவுட் நைன் மூவிஸ் நிறுவனம்தான் தயாரித்திருக்கிறது. இந்நிறுவனம் இதற்கு முன்பு தயாரித்த “வ குவாட்டர் கட்டிங்”, “அழகர்சாமியின் குதிரை” ஆகிய படங்கள் வெற்றி பெறாததால் தியேட்டர் அதிபர்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்களாம். பாதிக்கப்பட்ட தியேட்டர் அதிபர்கள்தான் இப்போது, மங்காத்தாவுக்கு போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். முந்தைய படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டாமல், புதிய படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று, தியேட்டர் அதிபர்கள் சங்கம் கிடுக்கிப் பிடி போட்டிருக்கிறது.

இதனை சற்றும் எதிர்பாராத தயாரிப்பு தரப்பு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறதாம். அதேநேரம் தல அஜீத்தோ… படத்தை முடித்துக் கொடுத்ததோடு தன் கடமை முடிந்து விட்டது. அதற்கு பிறகு அது தயாரிப்பாளர் பாடு, விநியோகஸ்தர்கள் பாடு என்று ஒதுங்கிக் கொண்டாராம்.
Tags: