புத்தளத்தில் பொலிஸார் பொதுமக்கள் மோதல்!

புத்தளத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும்,  அதன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற போது மர்ம மனிதர் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேச மக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ்உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார். 

இதனையடுத்து பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் பிரதேச மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
Tags: ,