விஜயின் பார்ட்டிக்கு மங்காத்தாவின் ரத்தத்தின் ரத்தம்

விஜய் தனது நண்பன் திரைப்படத்தில் தன்  காட்சிகள் அனைத்தும் முடிவுற்றமையை  கொண்டாடுவதற்காக பார்ட்டியோன்றை ஏற்பாடு செய்திருந்தார். இப் பார்ட்டியில் நண்பன் பட குழுவின் அனைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர், பார்ட்டி சென்னையிலுள்ள போஸ் கிரீன் பார்க் ஹோடேலில் நடைபெற்றது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால், மங்காத்தா திரைப்படத்தின் ரத்தமான இயக்குனர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். இதன் போது அவரிடம் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் ட்ரைலர் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும்,  ஷங்கரிடம் படத்தை கட்டாயம் பார்க்குமாறும் கூறினார்.


வெங்கட் பிரபு மற்றும் ஷங்கர் வேலாயுதம் திரைப்படத்தின் வெளியீடு பற்றியும் பேசிக்கொண்டனர். வெங்கட் பிரபு வருகையினால் அஜித்தும் வருவார் என்ற பாரிய எதிர்பார்ப்பு பார்ட்டியில் நிலவியது, இருந்தும் அவர் Billa 2 படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Tags: