
இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி சார்பாக மஹேல ஜெயவர்தன 86 ஓட்டங்களை பெற்றார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் வெட்சன் 57 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் மென்டிஸ் 4 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை 20 க்கு 20 போட்டிகளில் உலக சாதனையாக கருதப்படுகிறது.
களத்தடுப்பில் இலங்கையணி வீரர் மதீவ்ஸ் மிகவும் சிறப்பாக செயற்பட்டு ஒரு 6 ஓட்டத்தை தடுத்து பந்தை தட்டிவிட அருகில் ஓடிவந்த மகில ஜெயவர்தன அப்பந்தை பிடித்து டேவிட் வார்னரை ஆட்டமிழக்க செய்தமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியாக அமைந்தது. (காணொளி Home பேஜ் இல் daily video பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது)
இதனடிப்படையில் இரண்டாவது டி20 போட்டியை இலங்கை 8 ஓட்டங்களால் வென்றது.